துணை ஜனாதிபதியின் தலையை குறிபார்த்து துப்பாக்கி சூடு: வெளியான வீடியோ ஆதாரம்!
அர்ஜெண்டினா துணை ஜனாதிபதி மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல்.
துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தகவல்.
அர்ஜெண்டினாவின் துணை ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்ய முயற்சித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜெண்டினாவில் முன்னாள் ஜனாதிபதியை ஆதரித்து நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அண்மை நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ப்யூனஸ் அயர்ஸில் (Buenos Aires) உள்ள அர்ஜெண்டினாவின் துணை ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னர் (Cristina Fernandez de Kirchner) வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்து போராட்டம் நடத்தினர்.
Cameras captured the moment a man in a crowd pulled a loaded gun on Argentina's Vice President Cristina Fernandez de Kirchner. He fired — but luckily the weapon jammed. pic.twitter.com/z5McGdzhcK
— DW News (@dwnews) September 2, 2022
இந்த போராட்டத்தின் போது துணை ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸை, மர்ம நபர் ஒருவர் மறைத்து வைத்து இருந்த கைத்துப்பாக்கியால் படுகொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இவற்றில் அதிர்ஷ்டவசமாக துணை ஜனாதிபதி பாதிக்கப்படவில்லை மற்றும் துப்பாக்கி சூடு எதுவும் அவரை தாக்கவில்லை.
இதுகுறித்து அர்ஜெண்டினாவின் ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ் (Alberto Fernández) தெரிவித்த தகவலில், மர்ம நபர் துப்பாக்கியால் சுடுவதற்காக துப்பாக்கியின் தூண்டுதலை அழுத்தினார், ஆனால் துப்பாக்கி சுடவில்லை என தெரிவித்துள்ளார்.
#Mundo| Las autoridades argentinas detuvieron un hombre que intentó dispararle a la vicepresidenta Cristina Fernández de Kirchner.
— ÚltimaHoraCaracol (@UltimaHoraCR) September 2, 2022
El ministro de Seguridad, Aníbal Fernández, aseguró que están revisando qué tipo de arma se utilizó. @EddyMosquera0 pic.twitter.com/qVJa3pIRCs
இதனைத் தொடர்ந்து வியாழன் இரவு உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் வெளியான வீடியோ ஆதாரங்களில், பெர்னாண்டஸ் தனது வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்களால் சூழப்பட்ட போது மர்ம நபர் ஒருவரின் கையில் உள்ள துப்பாக்கி நேராக துணை ஜனாதிபதியின் தலையை குறிவைப்பதை காட்டுகிறது, அத்துடன் துணை ஜனாதிபதி பெர்னாண்டஸ் தனது வாகனத்தில் வெளியேறுவதையும் வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.
கூடுதல் செய்திகளுக்கு: உலகின் மிகப் பெரிய கப்பல்...முதல் பயணத்திற்கு முன்பே ஸ்கிராப்பிற்கு விற்பனை!
இதையடுத்து ஆயுதம் ஏந்திய நபர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், சம்பவ இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் ஆயுதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் செய்திகளின் அடிப்படையில், துப்பாக்கியில் குண்டுகள் ஏற்றப்பட்டதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.