உலகின் மிகப் பெரிய கப்பல்...முதல் பயணத்திற்கு முன்பே ஸ்கிராப்பிற்கு விற்பனை!
உலகின் மிகப் பெரிய கப்பல் தனது முதல் பயணத்திற்கு முன்பே அழிக்கப்பட உள்ளது.
900 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலில் 9000 பயணிகள் பயணிக்கும் வசதி கொண்டது.
சுமார் 900 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் அதன் முதல் பயணத்திற்கு முன்பே அழிக்கப்பட உள்ளது.
ஜெர்மன்-ஹாங்காங் கப்பல் கட்டும் நிறுவனம் MV Werften-ஆல் கட்டமைக்கப்பட்ட குளோபல் ட்ரீம் II கப்பல் 9000 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய 20 அடுக்குமாடி தளங்களை உள்ளடக்கிய மிகப் பெரிய பயணக் கப்பல் ஆகும்.
மேலும் இவற்றில் வெளிப்புற நீர் பூங்கா மற்றும் ஆடம்பரமான சினிமா திரையரங்குகள் ஆகியவை உள்ளடக்கியது, இந்த சொகுசு கப்பல் சுமார் 900 மில்லியன் பவுண்ட் மதிப்பு கொண்டது ஆகும்.
Credit: AFP
இந்தநிலையில் குளோபல் ட்ரீம் II கப்பலை கட்டும் MV Werften நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திவால்நிலைக்கு தள்ளப்பட்டதை தொடர்ந்து, குளோபல் ட்ரீம் I, குளோபல் ட்ரீம் II என்ற இரண்டு கப்பல்களையும் விற்பனை செய்வதற்கு தயாராகி வருகின்றனர்.
குளோபல் ட்ரீம் II பயண கப்பலை கட்டும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்து இருக்கும் நிலையில், இதுவரை கப்பலை கட்டுவதற்கு சுமார் 1.2 பில்லியன் பில்லியன் பவுண்ட்கள் செலவாகியுள்ளது இது அதன் பட்ஜெட்டில் இருந்து 200 மில்லியன் பவுண்டுகள் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: Dream Cruises
நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டதால் குளோபல் ட்ரீம் கப்பல்கள் விற்பனைக்கு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இந்த பெரிய கப்பல்களை வாங்க யாரும் முன்வரவில்லை.
இதனால் கப்பல்களின் எஞ்சின்கள் மற்றும் பாகங்கள் இப்போது விற்கப்பட உள்ளன, ஜெர்மன் பயணத் தொழில் இதழான ஆன் போர்டு படி, ஸ்கிராப்புக்கு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Credit: Alamy
இதுத் தொடர்பாக MV Werften இன் நிர்வாகி, Christoph Morgen செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்தில், விஸ்மரில் உள்ள நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளம் Thyssenkrupp இன் கடற்படைப் பிரிவுக்கு விற்கப்பட்டதாகக் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: தலைமுறையையே ஊக்கப்படுத்தியதற்கு நன்றி...விராட் கோலிக்கு ஜெர்சியை பரிசாக வழங்கிய ஹாங்காங் அணி
2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் குளோபல் ட்ரீம் அதன் கட்டிடக் கப்பலில் இருந்து வெளியேறுவதற்கான இறுக்கமான காலக்கெடுவை எதிர்கொண்டுள்ளதால், துருக்கியில் கப்பலை மறுசுழற்சி செய்வது மோர்கன் தவிர்க்கும் கடைசி முயற்சியாகும்.
Credit: AFP