ட்ரம்ப் பாதுகாப்பில் கேள்விக்குறி., கோல்ஃப் மைதானத்தில் ஆயுதத்துடன் நுழைந்த நபர்
ட்ரம்ப் கோல்ஃப் மைதானத்தில் ஆயுதத்துடன் நுழைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோல்ஃப் மைதானத்தில் நிதி திரட்டும் விருந்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கலிபோர்னியாவில் உள்ள ராஞ்சோ பாலோஸ் வெர்டெஸ் பகுதியில் அமைந்துள்ள அவரது சொந்த Trump National Golf Course-இல் நிதி திரட்டும் விருந்தில் பங்கேற்க இருந்தார்.
அதற்கு சற்று முன், அப்பகுதியில் ஆயுதத்துடன் நுழைந்த அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

ஜீனின் ஜான் டேல் (38) என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபர், துப்பாக்கி மற்றும் சட்டவிரோத குண்டுகள் வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் ஷெரிஃப் துறை கூறியதாவது:
அந்த நபர் மைதானத்தில் சுற்றி நடந்து, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
அவரிடம் 16 குண்டுகள் கொண்ட ஹாலோ பாயிண்ட் குண்டுகள் மற்றும் ஏற்கனவே லோடு செய்யப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அவரது வாகனத்திலும் கூடுதல் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பின்னர் அவரது வீட்டில் FBI மற்றும் LA கவுண்டி ஷெரிஃப் துறை சோதனை நடத்தியதில், சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட ரைபிள், பிஸ்டல், உடற்கவசம் மற்றும் பல்வேறு குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
அதிகாரிகள் தெரிவித்ததாவது, “இந்த சம்பவம் சமூகத்திற்கு நேரடி அச்சுறுத்தலாக இல்லை. ஆனால், சந்தேகத்திற்கிடமான செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது மிக முக்கியம்” எனக் கூறினர்.
ட்ரம்ப், கலிபோர்னியாவில் நடைபெறும் குடியரசுக் கட்சி நிதி திரட்டும் விருந்தில் பங்கேற்க வந்துள்ளார். அங்கு அவர், கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் மீது கடுமையான விமர்சன உரையாற்ற உள்ளார்.
இந்த சம்பவம், ட்ரம்ப் மீது கடந்த சில ஆண்டுகளில் நடந்த பல தாக்குதல் முயற்சிகளுக்குப் பிறகு, அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |