கிராமத்திற்குள் புகுந்து மர்ம கும்பல் துப்பாக்கிச்சூடு: நைஜீரியாவில் 30 பேர் பலி
நைஜீரியாவில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
மர்ம கும்பல் துப்பாக்கிச்சூடு தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை நைஜீரியாவின் மத்திய வடக்கு பகுதியில் உள்ள நைஜர் மாநிலத்தில் ஆயுதமேந்திய மர்ம கும்பல் ஒன்று கொடூரமான துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30 கிராம மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆயுதமேந்திய மர்ம கும்பலின் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு டெமோ சமூக குழுவுக்கு உட்பட்ட கசுவான் தாஜி என்ற கிராமம் இலக்காகியுள்ளது.
பொலிஸார் தகவல்
நைஜர் மாநில காவல்துறை செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ஆயுதமேந்திய கும்பல் கிராமத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிராமத்தில் இருந்த பல்வேறு குடியிருப்புகளுக்கு தீ வைத்து சொத்துக்களை அழித்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டு இருப்பதுடன், அப்பகுதியில் உள்ள சில கிராம மக்களை அந்தக் கும்பல் கடத்தி சென்று இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் கொள்ளை கும்பலின் முக்கிய நோக்கம், குடும்பத்தினரிடம் இருந்தும், அரசிடம் இருந்தும் பெரும் பிணைத் தொகையை பறிப்பதாகும்.
இந்நிலையில் தப்பிச் சென்ற குற்றவாளிகளை கைது செய்து தொடர்பான விசாரணையில் நைஜீரியா பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |