வெனிசுலா நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்: போப் லியோ கவலை
வெனிசுலா ஜனாதிபதி அமெரிக்க இராணுவ படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டதை அடுத்து அந்த நாட்டின் இறையாண்மையை காக்க வேண்டும் என திருத்தந்தை 14ம் ஆம் லியோ கோரிக்கை விடுத்துள்ளார்.
வெனிசுலா இறையாண்மை காக்க போப் லியோ அழைப்பு
வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்து இருப்பதாக அறிவித்து இருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரோம் நகரின் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் திரண்டிருந்த மக்களிடையே பேசிய போப் லியோ, இந்த இக்கட்டான சூழ்நிலையில் வெனிசுலாவில் அமைதி திரும்பவும், அந்நாட்டின் தன்னாட்சி அதிகாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புவிசார் அரசியல் நிலைகளை விட வெனிசுலா மக்களின் நலன் அனைத்தையும் விட மேலானதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த நெருக்கடியால் வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான மற்றும் சட்ட ரீதியான பாதிப்புகள் குறித்த கவலையையும் திருத்தந்தை லியோ வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் வன்முறையை கைவிட்டு விட்டு நாடு அமைதி மற்றும் நீதியில் பயணிக்க வேண்டும் என்றும் திருந்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையில் முதல் முறையாக அமெரிக்க திருத்தந்தையாக 14ம் லியோ பொறுப்பேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |