தானாக வெடித்த துப்பாக்கியால் பலியான ராணுவ வீரர்
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கி வெடித்ததில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காட்டி செக்டரில், இந்திய இராணுவத்தில் பணியாற்றி வந்தவர் ஜஸ்பீர் சிங். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பணிக்கு நிறுத்தப்பட்டிருந்த இவர், கையில் துப்பாக்கி ஏந்தியிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்ப்பாராத விதமாக அவரது துப்பாக்கி வெடித்ததாக தெரிகிறது. இதில் வெளியேறிய தோட்டா ஜஸ்பீர் சிங்கின் உடலை துளைத்துள்ளது.
PTI
பரிதாபமாக உயிரிழந்த வீரர்
இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவரது உடலைக் கைப்பற்றிய இராணுவக் குழு, பிரேத பரிசோதனைக்காக சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
iStock