1 வயது குழந்தையை கண்ணிலேயே சுட்ட இராணுவம்! ஒரே நாளில் 114 பேர் கொன்று குவிப்பு! நெஞ்சை உருக்கும் காட்சி
மியான்மரில் நேற்று மார்ச் 27ம் திகதி ஒரே நாளில் நாடு முழுவதும் 114 பேரை இராணுவ ஆட்சிக்குழுவின் ஆயுதமேந்திய படையினர் கொன்று குவித்ததாக மியான்மர் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.
மியான்மரில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டிய அந்நாட்டு இராணுவம், கடந்த மாதம் முக்கிய தலைவர்களை சிறைபிடித்து ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றியது.
இதைதொடர்ந்து ஆட்சிகவிழ்ப்பை எதிர்த்து போராடும் மக்களை இரக்கமின்றி மியான்மர் இராணுவம் சுட்டுக் கொன்று வருகிறது. மார்ச் 27ம் திகதி ஒரே நாளில் நாடு முழுவதும் 114 பேரை இராணுவ ஆட்சிக்குழுவின் ஆயுதமேந்திய படையினர் கொன்று குவித்ததாக மியான்மர் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் இராணுவம் ஆட்சி கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றி நாள் முதல் நாட்டில் ஒரே நாளில் அதிகபட்சமாக நேற்று மட்டும் 114 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், யாங்கோனில் உள்ள தமினில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தையை, ஆயுதமேந்திய படையினர் ரப்பர் புல்லட் மூலம் கண்ணில் சுட்டுள்ளனர்.
Heartbreaking images of a one-year-old baby in Thamine, Yangon, who was shot in the eye with rubber bullet as he was playing by the coup regime’s armed forces today (Mar 27). Dozens have been killed across the country. #WhatsHappeningInMaynmar pic.twitter.com/8tMwDoBPQS
— Myanmar Now (@Myanmar_Now_Eng) March 27, 2021
சுடப்பட்ட ஒரு வயது பெண் குழந்தை கதறி அழுது துடிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. குழந்தைக்கு ஏற்பட்ட காயம் குறித்த மேலதிக தகவல் ஏதும் வெளியாகவில்லை. எனினும், சிகிச்சைக்கு பின் நலமாக இருப்பதாக நம்பப்படுகிறது.
One-year-old baby in Thamine, Yangon, was shot in the eye with rubber bullet as he was playing by the coup regime’s armed forces today (Mar 27). Dozens have been killed across the country today. #WhatsHappeningInMyanmar pic.twitter.com/GSsHZm5kab
— Myanmar Now (@Myanmar_Now_Eng) March 27, 2021