ஆட்சியை கவிழ்த்து அரசாங்க அதிகாரத்தை கைப்பற்ற இராணுவம் சதித்திட்டம்! பிரபல நாட்டின் பிரதமர் பரபரப்பு தகவல்
ஆர்மீனியாவில் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்ற இராணுவம் முயற்சி மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் Nikol Pashinyan கூறியுள்ளார்.
General Staff-ன் அறிக்கை இராணுவ சதித்திட்டத்தின் முயற்சியாக நான் கருதுகிறேன். நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி நேரலையில் உரையாற்ற தயாராகி வருகிறேன், ஆதரவாளர்கள் உடனே தலைநகர் Yerevan-ல் கூடுமாறு அழைப்பு விடுத்து Nikol Pashinyan தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆர்மீனிய ஆயுதப்படைகள், முன்னதாக Pashinyan-ன் மற்றும் அவரது அரசாங்கத்தை ராஜினாமா செய்யக் கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில், தனது ராஜினாமா கோரிக்கைகளுக்குப் பிறகு ஆர்மீனிய ஆயுதப்படைகளின் தலைவரை பணிநீக்கம் செய்ததாக Pashinyan-ன் கூறினார்.
ரஷ்ய ஜனாதிபதி புடினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாகோர்னோ-கராபாக்கில் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் அஜர்பைஜான் ஜனாதிபதி Ilham Aliyev மற்றும் ஆர்மீனிய பிரதமர் Nikol Pashinyan ஆகியோர் கையெழுத்திட்ட நவம்பர் 10ம் திகதி முதல் Yerevan-ல் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் மூலம் மாத கணக்கில் நாகோர்னோ-கராபாக்கில் நடந்து வந்த மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், போர் தொடங்குவதற்கு முன்னர் ஆர்மீனியா ஆக்கிரமித்திருந்த பகுதிகளை அஜர்பைஜான் மீண்டும் கைப்பற்றியது. இது ஆர்மீனியாவில் உள்ள மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, பல ஆர்மீனியர்கள் நாகோர்னோ-கராபாக் மோதலில் ஆர்மீனியா தோல்வியடைந்ததாக விளக்கினர்.
ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள், Pashinyan பதவி விலக வேண்டும் எனவும், முன்னாள் பிரதமர் Vazgen Manukyan-ஐ பிரதமராக தலைமையேற்று அரசாங்கத்தை வழிநடத்த வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.