வெடிகுண்டு புரளியால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: பின்னர் நடந்த சம்பவத்தால் கொதிப்படைந்த ஐரோப்பிய நாடுகள்
நாடுகடத்தப்பட்ட பத்திரிகையாளரை கைது செய்யும் பொருட்டு, பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு புரளியை கிளப்பியதாக பெலாரஸ் நாடு மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி தலைநகர் மின்ஸ்க்கில் குறித்த விமானம் தரையிறங்க மறுப்பு தெரிவித்தால் சுட்டு வீழ்த்தப்படும் எனவும் அரசாங்க உயரதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.
ஏதென்ஸ் நகரில் இருந்து லிதுவேனியன் தலைநகர் வில்னியஸ் நோக்கி புறப்பட்ட Ryanair பயணிகள் விமானமே, மின்ஸ்க் நகரில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
26 வயதேயான Roman Protasevich என்ற பத்திரிகையாளரை கைது செய்யும் பொருட்டே, பெலாரஸ் அசராங்கம் வெடிகுண்டு புரளியை ஏற்படுத்தியுள்ளது.
பெலாரஸ் அரசாங்கத்தின் கடும் விமர்சகரான Roman Protasevich, தமது சக பயணிகளிடம், தாம் மரணத் தண்டனையை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மின்ஸ்க் நகரில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து பத்திரிகையாளர் Roman Protasevich கைது செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு பல ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இது பெலாரஸ் அரசாங்கம் முன்னெடுத்த பயங்கரவாத செயல் என விமர்சித்துள்ளது.