கிறிஸ்துமஸ் கேக்கில் விஷம்: பிரேசிலில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் பெண் கைது
விஷம் இருந்த கிறிஸ்துமஸ் கேக்கை சாப்பிட்ட பிரேசிலிய குடும்பத்தில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் கேக்கில் விஷம்
பிரேசிலின் டோரஸ் நகரில் கிறிஸ்துமஸ் குடும்ப கொண்டாட்டத்தின் போது ஆர்சனிக்(விஷம்) கலந்த கிறிஸ்துமஸ் கேக் சாப்பிட்டதால் 58, 65 மற்றும் 43 வயதான மூன்று சகோதரிகள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கேக்கை தயாரித்த 61 வயது சகோதரி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், இறந்த சகோதரிகளில் ஒருவரின் கணவர் மற்றும் பத்து வயது சிறுவன் ஆகிய இரண்டு பேர் மருத்துவமனையில் இருந்து தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
பெண் ஒருவர் கைது
இந்நிலையில் விஷம் கலந்த கேக்கை தயாரிக்க திட்டமிட்டதாக நம்பப்படும் சந்தேகத்திற்குரிய நபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதன்மை ஆய்வாளர், மார்கோஸ் வெலோசோ, கைது செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர் குற்றவாளி என்பதற்கு "வலுவான ஆதாரங்கள்" உள்ளதாக வலியுறுத்தினார்.
பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டவரின் விவரங்களை வெளியிடவில்லை, இருப்பினும் உள்ளூர் ஊடகங்களின் தகவல் படி, கைது செய்யப்பட்டவர் கேக்கை தயாரித்த பெண்ணின் மருமகள் என்று கூறப்படுகிறது.
காவல்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து வழங்கிய தகவலில், குடும்ப உறுப்பினர்கள் கேக்கில் புளிப்பு மற்றும் அசாதாரணமான சுவை இருப்பதை கவனித்துள்ளனர். அத்துடன் கேக் தயாரித்தவர் அதனை உட்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார், இருப்பினும் அது உண்ணப்பட்டதன் விளைவாக இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |