எடப்பாடி பழனிச்சாமி ஒரு கோழை! ஜெயலலிதா மரணம் தொடர்பில் பிரபலம் பேசிய வீடியோ
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி அறிக்கை பற்றி எடப்பாடி பழனிச்சாமி ஏன் பேசவில்லை என வாய்ஸ் ஆப் தமிழ்நாடு நிறுவனரான வழக்கறிஞர் ராஜசேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து ராஜசேகர் பேசுகையில், ஆறுமுகசாமி ஆணையம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. அந்த அறிக்கையை பார்த்தால் அப்படி தான் தெரிகிறது. வெங்காய நாயுடு, ஆளுநராக இருந்த வித்தியாசாகருக்கு தெரியாதது ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தெரியுமா?
எடப்பாடி பழனிச்சாமி மாதிரி சுயநல அரசியல்வாதியை நான் கண்டதில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பில் இரண்டு அறிக்கைகள் வந்துள்ளது.
அது பற்றி பேச அவருக்கு வாயில்லை, எடப்பாடி பழனிச்சாமி ஒரு கோழை என கூறியுள்ளார்.
வழக்கறிஞர் ராஜசேகரின் ஐபிசி தமிழுக்கு அளித்த முழு பேட்டியின் வீடியோ,