சோமாலிலாந்துக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்: பின்னணியில் அமெரிக்கா, இஸ்ரேலின் புதிய வியூகம்
சோமாலிலாந்து என்ற பகுதியை தனிநாடாக இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது.
முதல் நாடாக அங்கீகரித்த இஸ்ரேல்
சோமாலியாவின் தெற்கு பகுதி தங்களை 1991ம் ஆண்டு முதல் சோமாலிலாந்து என்று அறிவித்துக் கொண்டு தனிநாடாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிட்டத்தட்ட 60 லட்சம் மக்கள் வசித்து வரும் சோமாலிலாந்து என்ற நாட்டை அங்கீகரிப்பதாக 34 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேல் முதல் நாடாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் அமெரிக்காவின் புதிய வியூகம்
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ள இஸ்ரேலின் இந்த அங்கீகாரத்திற்கு பின்னணியில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பெரிய தந்திரமான வியூகம் இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.
அதாவது பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேறும் மக்களை சோமாலிலாந்தில் குடியமர்த்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், பின்னர் காசாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் சோமாலிலாந்து தனி நாடு இல்லை என்றும் அவை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்றும் சோமாலியா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் அறிவிப்புக்கு எதிர்ப்பு
சோமாலிலாந்து பகுதியை அங்கீகரிக்கும் இஸ்ரேலின் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஆப்பிரிக்க யூனியன் நாடுகளும், அரபு நாடுகளும் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அரபு லீக் பொதுச்செயலாளர் அகமது அபூல் கெய்ட் தெரிவித்த தகவலில், இஸ்ரேலின் இந்த அங்கீகாரம் சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்றும் நாடுகளிடையே உள்ள ஒற்றுமை மற்றும் இறையான்மையை அப்பட்டமாக மீறும் செயல் என்றும் கண்டித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |