முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வந்த முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஷஸ் தொடரின் முதல் போட்டி
இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வந்த ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் கடைசி நாள் ஆட்டம் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
முதல் இன்னிங்ஸின் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 78 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 393 ஓட்டங்கள் குவித்து இருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இதனை தொடர்ந்து 393 ஓட்டங்கள் என்ற முன்னிலையுடன் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 116.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 386 ஓட்டங்கள் குவித்தது.
இதையடுத்து 7 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 66.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்கள் குவித்தது.
Boland gone! ?
— England Cricket (@englandcricket) June 20, 2023
The Night Hawk gets the nightwatcher ? #EnglandCricket | #Ashes pic.twitter.com/qYhKZiW0ea
வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி
282 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலிய அணி நான்காம் நாளான நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது.
ஆனால் முன்னணி ஆட்டக்காரர்களான லபுசாக்னே (13), ஸ்டீவன் ஸ்மித் (6) என்ற சொற்ப ஓட்டங்களில் பிராட் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடு அதிர்ச்சியளித்தனர்.
இறுதியில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்கள் குவித்தது.
A simply staggering Test match comes to a close.
— England Cricket (@englandcricket) June 20, 2023
Australia win by 2️⃣ wickets ?
What an epic and entertaining five days of cricket we've seen. #EnglandCricket | #Ashes pic.twitter.com/KZEIsuxCCx
ஐந்தாவது மற்றும் இறுதி நாளான இன்று அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற 174 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அதே சமயம் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் தேவைப்பட்டது, இதனால் இன்றைய ஆட்டம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. 92.3 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 282 ஓட்டங்களை பெற்றுள்ளது.
That winning feeling ? #Ashes | #WTC25 pic.twitter.com/mqz4BX7BTi
— ICC (@ICC) June 20, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |