கட்டுக்கட்டாக பணத்தை ஹெலிகாப்டர் நிறைய அள்ளி சென்ற ஆப்கான் ஜனாதிபதி! தாலிபான்கள் நுழைந்தவுடன் நடந்த பரபரப்பு சம்பவம்
தாலிபான்கள் காபூலுக்குள் நுழைந்தவுடன், ஆப்கானிஸ்தான் ஜனாதி கார்கள் மற்றும் ஹெலிகாப்டர் நிறைய பணங்களை அள்ளிக் கொண்டு சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பு, ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு நகரையும் கைப்பற்றிய பின்பு, நேற்று நாட்டின் முக்கிய நகரான காபூல் நகரை கைப்பற்றினர்.
இங்கு தான் வெளிநாட்டு தூதரகங்கள், ஜனாதிபதிமாளிகை போன்றவைகள் இருக்கின்றன. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் மீண்டும் 20 ஆண்டுகளுக்கு பின் தாலிபான்கள் ஆட்சி அமைக்கவுள்ளனர்.
இந்நிலையில், காபூலுக்குள் தாலிபான்கள் நுழைந்தவுடன், ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த Ashraf Ghani நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
அப்போது அவர் நான்கு கார்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் நிறைய பணங்களை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக, காபூலில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக ,பிரபல ஆங்கில ஊடகம் ஆர்ஐஏ குறிப்பிட்டுள்ளது.
பணங்களை அள்ளி சென்ற போது, கொஞ்ச பணங்கள் ஹெலிகாப்டரில் நிறப்ப முடியாத காரணத்தினால் அங்கிருக்கும் சாலையில் சில பணங்கள் கிடந்ததை பார்க்க முடிந்ததாக கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய அவர் தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகின.
ஆனால், அவர் தற்போது உஸ்பெகிஸ்தானில் இருப்பதாக பிரபல ஆங்கில ஊடகமான அல் அஜீரா குறிப்பிட்டுள்ளது. மேலும், ரஷ்ய தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் Nikita Ishchenko, நான்கு கார்கள் நிறைய பணம் நிரப்பட்டிருந்தது.
பணத்தின் மீதியை ஹெலிகாப்டரில் அள்ளிச் செல்ல முயன்றனர். ஆனால் அவை போதாதா காரணத்தினால், சில பணங்களை சாலையில் விட்டுச் சென்றதாக கூறினார்.
ஆனால், எவ்வளவு பணத்தை எடுத்துச் சென்றார் மட்டும் விட்டுச் சென்றார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.