இலங்கை முன்னாள் வீரர் முரளிதரன் சாதனையை இவர் முறியடிக்க அதிக வாய்ப்பு இருக்கு! பிராட் ஹாக் கணிப்பு
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக், இலங்கை அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் சாதனையை முறியடிக்க ஒரே ஒரு வீரருக்கு தற்போதைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். '
கடந்த 1992-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன, முரளிதரன் கடந்த 2010-ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதனால் 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.
இந்த சாதனை பல ஆண்டுகள் இப்போது வரை முறியடிக்காமல் உள்ளது. இந்நிலையில், இது குறித்து அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக் கூறுகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 2011 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அஸ்வின் அதிவேகமாக 200, 250, 300, 350 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை எட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கூட 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிவேகமாக 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தற்போது அவருக்கு 34 வயது தான் ஆகிறது
அவர் 42 வயதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவார் என்று நினைக்கிறேன். அவரது பேட்டியில் தரம் குறைந்தாலும் பவுலிங்கில் எந்தவித குறைபாடும் இல்லை.
கண்டிப்பாக அவர் 600க்கும் அதிகமான டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்துவார். மேலும் முரளிதரன் 800 விக்கெட்டுகள் சாதனையை கூட அவரால் முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.