14 வயதான சிறுமியை மணந்த 60 வயதை நெருங்கும் ஆசிய பிரபலம்! சர்ச்சையை கிளப்பிய இத்திருமணம் குறித்து பேசிய சிறுமியின் தந்தை
பாகிஸ்தானில் எம்.பியாக உள்ள மவுலனா சலாவுதின் 14 வயது சிறுமியை மணந்த நிலையில் அது தொடர்பில் சிறுமியின் தந்தை பேசியுள்ளார்.
ஆசிய நாடான பாகிஸ்தானை சேர்ந்த செல்வந்தரும், எம்பியுமான மவுலனா சலாவுதினுக்கு வயது 60ஐ நெருங்குகிறது.
அவர் சமீபத்தில் 14 வயது சிறுமியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்ற சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக பொலிசார் விசாரணையை தொடங்கியும் இதுவரையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
பாகிஸ்தானில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை மணப்பது சட்டபடி குற்றமாகும். குறித்த சிறுமியின் தந்தை முதலில் தனது மகளுக்கு திருமணம் ஆனதை மறுத்து வந்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அப்சர்வர் என்ற உள்ளூர் பத்திரிக்கை இது தொடர்பில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சலாவுதினுக்கும் சிறுமிக்கும் முறைப்படியான திருமணம் இன்னும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளது.
மேலும் சிறுமியின் தந்தை தனது மகளுக்கு 16 வயது ஆகும் வரை யாரிடமும் அனுப்ப மாட்டேன் என்று அதிகாரிகளுக்கு உறுதியளித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.