சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்திய இந்தியா! அபிஷேக் சர்மா அதிரடி, நிசங்கா சதம்
ஆசிய கிண்ணம் 2025 டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றில் நாடற்ற இறுதி போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் 202/5 என்ற சம எண்ணிக்கையில் முடிவடைந்ததால், ஆட்டம் Super Over-க்கு சென்றது.
இதில் இலங்கை அணியின் 2 விக்கெட்டுக்களையும் எடுத்து இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
இந்தியா முதலில் துடுப்பாடியது. அபிஷேக் சர்மாவின் அதிரடி அரைசதம் (61 பந்துகளில் 31 ஓட்டங்கள், 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) மூலம் இந்தியா 202/5 என்ற எண்ணிக்கையை பதிவு செய்தது.
திலக் வர்மா (49), சஞ்சு சாம்சன் (39), அக்சர் படேல் (21) ஆகியோர் சிறப்பாக பங்களித்தனர்.
இலங்கை அணி பதிலடி கொடுக்கும்போது, பதும் நிசங்கா தனது முதல் T20I சதத்தை (58 பந்துகளில் 107 ஓட்டங்கள்) அடித்து அணியை வெற்றிக்கு நெருக்கமாக அழைத்து சென்றார்.
குசல் பெரேரா (58), தசுன் சனக (22) சிறப்பாக பங்களித்தனர். ஆனால் ஆட்டம் இறுதியில் சூப்பர் ஓவருக்கு சென்றது.
சூப்பர் ஓவரில் அர்ஷிதீப் சிங் சிறப்பாக பந்துவீசி, 2 விக்கெட்டுகளையும் எடுத்து இலங்கையை 2 ஓட்டங்களில் கட்டுப்படுத்தினார்.
சூப்பர் ஓவரில் அடுத்து இந்தியா சார்பில் சூரியகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் களமிறங்க, சூரியகுமார் யாதவ் முதல் பந்திலேயே 3 ஓட்டங்கள் எடுத்து இந்தியாவுக்கு வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியுடன் இந்திய அணி ஆசிய கிண்ணம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அமெரிக்க கனவுக்காக தொழில்நுட்ப வல்லுநர்கள் செல்லும் 500 ஆண்டுகள் பழமையான கோவில் - பூஜை, காணிக்கை தேவையில்லை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |