இத்தாலி தூதர் படுகொலை! காங்கோவில் என்ன நடந்தது? நெஞ்சை உருக்கும் புகைப்படம்
மத்திய ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் அந்நாட்டிற்கான இத்தாலி தூதர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு கிவுவில் உள்ள goma நகரின் Nyiragongo பகுதியில் இத்தாக்குதல் நடந்துள்ளது.
ஐ.நா-வின் உலக உணவு திட்டத்திற்கான வாகனத்தில் காங்கோவிற்கான இத்தாலி தூதர் Luca Attanasio உடன் இராணுவத்தினர் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென ஆயுதமேந்திய மர்ம நபர்கள் காரை நோக்கி சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் இத்தாலி இராணுவ வீரருடன் Luca Attanasio கொல்லப்பட்டதாக இத்தாலி வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் பலர் காயமடைந்ததாக காங்கோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா அதிகாரிகளை கடத்தும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது வரை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
தாக்குதலில் காயமடைந்த Luca Attanasio-வை வாகனம் ஒன்றில் கொண்டு செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
#DRC #NorthKivu Unidentified assailants attacked a World Food Programme (WFP) convoy traveling along the RN2 in the Nyiragongo area located north of Goma, Feb. 22. The attack left at least one person dead and several others injured. pic.twitter.com/oqJWDn1H6A
— Gabrian Kovacs (@511ZGS) February 22, 2021
தாக்குதல்தாரிகளை கண்டறியும் பணியில் காங்கோ இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
