பூமியை நோக்கி நகர்ந்து வரும் மிகப் பெரிய விண்கல் - நாசா வெளியிட்ட முக்கிய தகவல்!
பூமியை நோக்கி மிகப் பெரிய விண்கல் நகர்ந்து வருவதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது.
நாசா நிறுவனம்
நாசா என்பது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வின் அமைப்பாக விளங்கி வருகிறது. இது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு ஆகியவற்றை நிர்வகித்து வருகிறது.
நாசா 1958ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி விண்வெளிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. நாசா நிறுவனம் விண்வெளி ஆய்வு, அறிவியல் ஆராய்ச்சி மேற்கொண்டு எதிர்காலத்துக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
பூமியை நோக்கி நகர்ந்து வரும் விண்கல்
இந்நிலையில், பூமியை நோக்கி மிகப் பெரிய விண்கல் நகர்ந்து வருவதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாசா நிறுவனம் தெரிவிக்கையில், நாளை (ஏப்ரல் 26) 3 கால்பந்து மைதானங்களின் அளவு கொண்ட விண்கல் ஒன்று பூமியை கடக்க உள்ளது. இது மணிக்கு 62,723 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சந்திரன் பூமியிலிருந்து சராசரியாக 238,900 மைல்கள் தொலைவில் இது உள்ளது.
அந்த விண்கல்லிற்கு தற்போது 2006HV5 பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மிகப் பெரிய விண்வெளிப் பாறை நாளை பூமியைக் கடக்க உள்ளதால், அது பூமியில் வாழ்பவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை. விண்வெளிப் பாறை 2006 HV5 1.5 மில்லியன் மைல் தொலைவில் கடந்து செல்ல உள்ளது. இது பூமியின் நிலவு தூரத்தை விட 6.3 மடங்கு அதிகம் என்று தெரிவித்துள்ளது.
#2006HV5 will pass by Earth on the day side.
— ESA Operations (@esaoperations) April 25, 2023
That means it’ll be hidden in the glare of our Sun for much of the time and difficult to observe, despite its large size.
But #2006HV5 has already been well observed. We know its orbit well and we know it’s no threat to Earth. pic.twitter.com/vo59beyMJg