ரஷ்ய வானில் பிரகாசமான ஒளியுடன் சீறிப்பாய்ந்த விண்கல்., பல இடங்களில் பதிவான காட்சி
புதன்கிழமை அதிகாலை ரஷ்யாவின் யாக்கூட்டியா பகுதியில் வானத்தில் ஒரு விண்கல் சீறிப்பாய்ந்த்து. இது வானத்தில் ஒரு பிரகாசமான ஒளிச்சுடரை உருவாக்கியது.
ரஷ்யாவில் பலரும் இந்த காட்சியை தங்கள் மொபைலில், கமெராவில் பதிவு செய்துள்ளனர்.
ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த விண்கல் சுமார் 70 செ.மீ. விட்டம் கொண்டதாக இருந்தது.
இது 2022 WJ, 2023 CX1 மற்றும் 2024 BX1 போன்ற பிற விண்கற்களைப் போன்றதொரு விண்கல்லாகும்.
இந்த விண்கல்லின் வீடியோகளில், அது மேல் வானத்தில் இருந்து பறந்து வந்து மின்னல் போல் மாயமாவதை காணலாம்.
யாக்கூட்டியாவின் அவசர நிலை அமைச்சகம் அனைத்து அதிகாரிகளையும் விழிப்புடன் வைத்திருந்ததாகவும், விண்கல்லின் விழுதுகள் யாருக்கும் சேதமின்றி கரடுமுரடான காட்டுப் பகுதியில் வீழ்ந்ததாகவும் தெரிவித்தது.
An #asteroid, about one meter in diameter, fell in #Yakutia, #Russia, on December 3rd. Detected by the# Kitt #Peak #Observatory, it entered Earth's atmosphere around 7:17 PM Moscow time. Experts confirmed it posed no threat, as the small asteroid likely burned up in the… pic.twitter.com/iK62bcsdTB
— Cyrus (@Cyrus_In_The_X) December 3, 2024
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) வெளியிட்ட தகவலின் படி, இந்த விண்கல் பூமியில் விழுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பே கண்டறியப்பட்டது. மேலும், இது 70 செ.மீ. அகலம் கொண்டது என நம்பப்படுகிறது.
இது உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.15 மணிக்கு பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தது. அவ்வாறு நுழையும்போது, விண்கல் பல துண்டுகளாக வெடித்துப் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வினோத நிகழ்வு ரஷ்யாவின் யாக்கூட்டியாவில் மக்கள் மற்றும் விஞ்ஞானர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |