முதல் தொகுப்பாக ஐந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றடைந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகள்!
பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 5 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் முதல் தொகுப்பை சனிக்கிழமை பெற்றன.
ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானிய நிறுவனமான அஸ்ட்ராஜெனேகாவிடமிருந்து மொத்தம் 300 மி. கொரோனா தடுப்பூசிகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
அதில் முதல் கட்டமாக மார்ச் இறுதிக்குள் 80 மில்லியன் டோஸ்களை எதிர்பார்த்த நிலையில், மாறாக 40 மில்லியன் டோஸ்களை மட்டும் வழங்குவதாக கடந்த வாரம் அஸ்திராஜெனேகா பின்வாங்கியது.
இதனால், பிரித்தானியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்தது. பல ஐரோப்பிய நாடுகள் அஸ்ட்ராஜெனேகாவின் பொறுப்பற்ற பதிலுக்கு கண்டனம் தெரிவித்து வந்தன.
இந்நிலையில், சனிக்கிழமையன்று அஸ்ட்ராஜெனேகாவின் முதல் தொகுப்பில் 5 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தடுப்பூசி சென்றடைந்துள்ளது.
பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, ஹங்கேரி மற்றும் செக் ரிபப்ளிக் ஆகியவை அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதல் தொகுப்பை நேற்று பெற்றன.
அதில், இத்தாலி 249,600 டோஸ்களையும், பிரான்ஸ் 273,600 டோஸ்களை பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து 40,000 டோஸ்களை ஹங்கேரியும், 36,000 டோஸ்களை ஆஸ்திரியாயும் மற்றும் 19,200 டோஸ்களை செக் ரிபப்ளிக்கும் பெற்றுள்ளன.