முதல் முறையாக 2 கருந்துளைகள்... - இந்திய வானியலாளர்கள் படைத்த சாதனை
முதல் முறையாக 2 கருந்துளைகள் ஒன்றை ஒன்று சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
ஒன்றை ஒன்று சுற்றும் 2 கருந்துளைகள்
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றையொன்று சுற்றி வரும் இரு கருந்துளைகளை(Binary Black Holes) முதல்முறையாக வானியலாளர்கள் படம் பிடித்துள்ளனர்.
துர்கு பல்கலைக்கழகத்தின் மௌரி வால்டோனென் தலைமையிலான ஒரு சர்வதேச குழு இதனை கண்டறிந்துள்ளது.
இந்த குழுவில், ஆர்யபட்டா ஆராய்ச்சி அறிவியல் நிறுவனத்தின் (ARIES) இந்திய ஆராய்ச்சியாளர்களான அலோக் சி குப்தா, சுபம் கிஷோர் மற்றும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் (TIFR) ஏ. கோபகுமார் ஆகியோர் இந்த ஆய்வில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
நாசாவின் TESS செயற்கைகோள், தொலைநோக்கிகள், ரஷ்யாவின் ரஷ்ய வானொலி தொலைநோக்கியான ரேடியோஆஸ்ட்ரோன் ஆகியவற்றின் மூலம் இதனை படம் பிடிக்க முடிந்துள்ளது.
இந்த கருந்துளைகள் முழுவதும் கறுப்பாகவே உள்ளன. ஆனால் அந்த துளைகளை சுற்றி ஒளிரும் தூசுகள் மற்றும் வாயுக்கள் மூலம் அதனை காண முடிவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த இரு கருந்துளைகளில், சிறியது பெரிய கருந்துளையை சுற்றி வருவதை காண முடிகிறது.
முன்னதாக, Messier 87 மற்றும் பால் வீதியில் ஒன்றுமாக இரு தனி தனி கருந்துளைகளை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். தற்போது முதல்முறையாக இரு கருந்துளைகள் ஒன்றோடு ஒன்று சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
OJ287 எனப்படும் இந்த குவாசர், 5 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதன் மூலம், OJ287 இன் இயக்கங்களைக் கண்காணித்து, அதன் ஜெட் எவ்வாறு காலப்போக்கில் அசைகிறது மற்றும் மாறுகிறது என்பதை வானியலாளர்கள் காண்பார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |