எலும்புகளை உருக்கும் ஆயுதம்... இஸ்லாமிய நாடொன்றின் மீது பயன்படுத்தும் இஸ்ரேல்
ஒரே நேரத்தில் காஸாவில் ஹமாஸ் படைகளுடனும், லெபனானில் ஹிஸ்புல்லா படைகளுடனும் இஸ்ரேல் சண்டையிட்டு வந்துள்ளது.
இன்னும் பதட்டமாகவே
இதில் ஹமாஸ் படைகளுக்கு எதிராகவே இஸ்ரேல் இராணுவம் நேரடியான போரை முன்னெடுத்தது. இந்த நிலையில் தற்போது ட்ரம்பின் தலையீட்டின் கீழ் இஸ்ரேலும் ஹமாஸ் படைகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆனால், இஸ்ரேலில் தற்போதுள்ள தீவிர வலதுசாரி ஆட்சியாளர்களால் நிலைமை இன்னும் பதட்டமாகவே உள்ளது. லெபனானில் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது.
மட்டுமின்றி, தடை விதிக்கப்பட்ட ஆயுதங்களையும் லெபனான் மீது இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது காஸா மற்றும் லெபனானில் வெள்ளை பாஸ்பரஸைப் பயன்படுத்தியதாக இஸ்ரேல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையம் லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேலிய இராணுவம் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துவதைப் பற்றிய பிரச்சினையை எழுப்பியது.
அல் ஜசீரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இஸ்ரேல் சமீபத்தில் தெற்கு லெபனானில் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளது.
லெபனான் மக்களுக்கு இந்தப் பகுதியை தடைசெய்யப்பட்ட மண்டலம் என்று இஸ்ரேல் இராணுவம் அடையாளப்படுத்தியுள்ளது, மேலும் அப்பகுதியில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்றும் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
இன்னொரு அறிக்கையில், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் மற்றும் பிற இராணுவ நடவடிக்கைகளைப் பயன்படுத்தி தெற்கு லெபனானில் ஒரு இடையக மண்டலத்தை உருவாக்க இஸ்ரேல் முயற்சிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரடியாக எரித்துவிடும்
வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் 30°C க்கும் அதிகமான வெப்பநிலையில் ஆக்ஸிஜனுடன் தொடர்பு கொண்டவுடன் உடனடியாக எரிகின்றன. இந்த வினையானது பாஸ்பரஸ் ஆக்சைட்டின் அடர்த்தியான வெள்ளைப் புகையையும் வெளியிடுகிறது.
இந்த நெருப்பானது மிகவும் கடுமையானது, அது தாவரங்கள், கட்டிடங்கள் மற்றும் மனிதர்களை கூட நேரடியாக எரித்துவிடும். ஆனால், வெள்ளை பாஸ்பரஸை வெறும் புகைமறைவிற்கு என மட்டுமே பயன்படுத்தியதாக இஸ்ரேல் வாதிட்டுள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறி, மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் அவற்றைப் பயன்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் மீது மனித உரிமைகள் முகமைகள் குற்றம் சாட்டியுள்ளன.
வெள்ளை பாஸ்பரஸ் மனித எலும்புகளை எரிக்கும் திறன் கொண்டது. மட்டுமின்றி, இது மனித உடலால் உறிஞ்சப்பட்டு, கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் இதயம் உட்பட பல உறுப்புகளை முடக்குவதற்கு வழிவகுக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |