தென்னாபிரிக்க வகை கொரோனா வைரசுக்கு எதிராக தாராளமாக அஸ்ட்ராஜெனேகாவை பயன்படுத்தலாம்: WHO பரிந்துரை
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை தாராளமாக பயன்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பளர்வமாக பரிந்துரைத்துள்ளது.
சமீபத்தில் தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 2000 பேரைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி குறைந்தபட்ச பாதுகாப்பை மட்டுமே வழங்குவதாக கண்டறியப்பட்டது.
அதன் காரணமாக சில ஐரோப்பிய நாடுகள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை பயன்படுத்த மறுத்துவிட்டன.
அதனைத் தொடர்ந்து, WHO வல்லுநர்கள் ஜப் பற்றிய ஆய்வுகளிலிருந்து அனைத்து ஆதாரங்களையும் மறு ஆய்வு செய்துள்ளனர்.
இந்நிலையில், தென்னாப்பிரிக்க மாறுபாட்டிற்கு எதிராக ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசியை பயன்படுத்தக்கூடாது என்பதற்கு 'எந்த காரணமும் இல்லை' என்றும் மற்ற அனைத்து வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக பயனளித்துள்ளது எனவும் WHO தெரிவித்துள்ளது.
65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளது.
மேலும், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி குறைந்தபட்ச பாதுகாப்பை கொடுத்தாலும், ஒருவரை மரணத்திலிருந்து காக்கும் திறன் கொண்டது என்று WHO தெரிவித்துள்ளது.