மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து.. ஜன்னல் வழியே தப்பிய நோயாளிகள்: 29 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிலுள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட தீ விபத்து
சீனாவின் (Beijing)பெய்ஜிங்கிலுள்ள சாங்ஃபெங் மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 39 பேர் தீ காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையிலிருந்த 142 பேரை மீட்ட தீயணைப்பு படையினர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் 78 பேர் மருத்துவமனையின் பாதிக்கப்படாத பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
@ap
ஃபெங்டாய் மாவட்டத்தின் துணைத்தலைவர் லீ ஜோங்கிராங்(Li Zongrong) கூறியதாவது
”தீ விபத்தில் 13 ஆண்களும், 16 பெண் நோயாளிகளும் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் மூன்று மருத்துவமனை ஊழியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
VIDEO : બેઈજિંગની હોસ્પિટલમાં ભિષણ આગ, 21ના મોત, જીવ બચાવવા બારીમાંથી કૂદી પડ્યા લોકો#ChinaHospitalFire #BeijingFire #ChinaFire pic.twitter.com/2YqMwwLWzR
— Gujarat Samachar (@gujratsamachar) April 18, 2023
சிலர் தீ விபத்தின் போது படுக்கை விரிப்புகளை பயன்படுத்தி ஜன்னல் வழியாக கீழே இறங்கி வந்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம்
இந்த விபத்தில் மொத்தம் 39 பேர் காயமடைந்திருக்கிறார்கள், அதில் 3 பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
@ap
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் மருத்துவமனையிலுள்ள உள்நோயாளிகள் பிரிவில், வெல்டிங் செய்து கொண்டிருக்கும் போது உண்டான தீ பொறியால், விபத்து உண்டாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகப்படுகிறார்கள்.
சாங்ஃபெங் மருத்துவமனையின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் குழு உட்பட மருத்துவமனை கட்டிட பொறியாளர் குழுவினருடன், பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
@ap
பராமரிப்பு இல்லங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களில், தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நகர அளவிலான விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.