2 மணி நேர பயணம் 20 நிமிடங்களில்! நடிகை ராஷ்மிகா பதிவுக்கு இந்திய பிரதமர் பதில்
'அடல் சேது' கடல் பாலம் குறித்த நடிகை ராஷ்மிகா மந்தனா பதிவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார்.
ராஷ்மிகா பதிவு
கடந்த ஜனவரி மாதம் மும்பையின் ஷிவ்டி-யிலிருந்து நவாவை இணைக்கும் 22 கி.மீ. நீளமுள்ள 6 வழிச்சாலையுடன் கூடிய கடல் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்த பாலமானது 'அடல் பிஹாரி வாஜ்பாய் சேவரி - நவா சேவா அடல் சேது' என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த பாலம் வழியாக ராஷ்மிகா மந்தனா பயணம் செய்த அனுபவத்தை தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர்," தென்னிந்தியா முதல் வட இந்தியா வரை, மேற்கு இந்தியா முதல் கிழக்கு இந்தியா வரை, மக்களை இணைக்கிறது, இதயங்களை இணைக்கிறது" என்று கூறியுள்ளார்.
மோடி பதில்
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ராஷ்மிகாவின் பதிவை பகிர்ந்து, "நிச்சயமாக, மக்களை இணைப்பதையும், வாழ்க்கையை மேம்படுத்துவதையும் விட திருப்திகரமாக எதுவும் இல்லை” என கூறியுள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்மிகா, " 2 மணி நேர பயணத்தை 20 நிமிடங்களில் கடக்கலாம். இதை நீங்கள் நம்ப மாட்டீர்கள். இப்படி ஏதாவது நடக்கும் என யார் நினைத்திருப்பார்கள்.
அனைத்து பயணங்களும் எளிதாக உள்ளன. பெருமையாக இருக்கிறது" என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |