ஏப்ரல் 6-ல் Rizta எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் Ather., சிறப்பு அம்சங்கள் என்ன?
தாராளமான இருக்கை கொண்ட பயனர்கள் விருப்பத்திற்கேற்ப Rizta எனும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை Ather உருவாக்கியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த எலக்ட்ரிக் டூவீலர் தயாரிப்பு நிறுவனமான 'Ather Energy' நிறுவனம், 'Rizta ' என்ற புதிய ஸ்கூட்டரை ஏப்ரல் 6ஆம் திகதி அறிமுகம் செய்கிறது.
மீண்டும் எழுச்சிப் பாதையில் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி., ரிலையன்ஸ் பவர் பங்குகள் அதிரடி உயர்வு
சில நாட்களாக சோதனை செய்யப்பட்டு வரும் இந்த ஸ்கூட்டரில் மிகப்பாரிய boot space மற்றும் மிகப்பாரிய இருக்கை உள்ளது.
Ather தலைமை நிர்வாக அதிகாரி தருண் மேத்தா Ather Rizta-வின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ரிஸ்ட்டா ஸ்கூட்டர் இருக்கை Ola Electric S1 மற்றும் Honda Activa ஸ்கூட்டர்களைப் போன்றது.
Rizta EV ஸ்கூட்டரின் விலை ரூ.1.25 லட்சம் முதல் ரூ.135 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ather Rizta EV ஸ்கூட்டரில் horizontal LED head light, tail lamp, full LED lighting, fully digital screen, ride mode, smart phone connectivity, fast charging மற்றும் பிற விருப்பங்கள் உள்ளன.
இந்த ஸ்கூட்டரில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை பயணிக்க முடியும். இரண்டு சக்கரங்களிலும் சஸ்பென்ஷனுக்கான டிஸ்க் பிரேக்குகள் மற்றும் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் யூனிட் உள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயணம் செய்யும் வகையில் இந்த ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளதாக Ather கூறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ather Rizta EV, Ather Energy Rizta Electric Scooter