ஐரோப்பிய நாடொன்றில் பாரிய ரயில் விபத்து: 35க்கும் மேற்பட்டோர் பலி
At least 50 people have died after two busy high-speed trains collided in Spain: ஸ்பெயின் நாட்டில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 35க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டிலுள்ள மாட்ரிட் நகருக்கும் ஆண்டலூசியா என்னுமிடத்துக்கும் இடையிலுள்ள ரயில் பாதையில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இரண்டு ரயில்கள் மோதி விபத்து
அந்த ரயில்களில் ஒன்று நின்றுகொண்டிருந்ததாகவும், வேகமாக வந்த மற்றொரு ரயில் நின்றுகொண்டிருந்த ரயில் மீது மோதியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான ரயில்களில் ஒன்றில் 397 பயணிகளும், மற்றொன்றில் 147 பயணிகளும் இருந்துள்ளார்கள்.
இந்த கோர விபத்தில் 35க்கும் மேலானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், 10 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன.
சம்பவ இடத்தில் மீட்புக் குழுவினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.

ஏற்கனவே ஸ்பெயினில் ஜனவரி மாதம் நிகழ்ந்த ரயில் விபத்தொன்றில், ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்து அதைவிட மோசமானதாக இருக்கக்கூடும் என்கிறார் உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர்.