மணிப்பூரில் பயங்கரவாத தாக்குதல் - 2 படை வீரர்கள் பலி!
மணிப்பூரில் இந்திய - மியான்மர் எல்லையில் உள்ளூர் பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
2 படை வீரர்கள் பலி
மணிப்பூரில் நேற்றைய தினம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு நடைபெற்றிருந்தது.
இதற்காக துணைநிலை ராணுவத்தினர் அங்குள்ள வாக்குச்சாவடிகளில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
அவர்களில் பிஸ்னுபூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட துணைநிலை ராணுவத்தினர் மலையடி வார கிராமத்தில் தங்கியிருந்தனர்.
நரைன்சைனா என்ற கிராமத்தில் துணைநிலை ராணுவத்தினர் ஓய்வு எடுத்து வந்தனர்.
நேற்று இரவு 12.30 மணியளவில் அந்த முகாம் மீது மணிப்பூர் பயங்கரவாத குழு ஒன்று திடீர் தாக்குதல் நடத்தியது.
மலையில் பதுங்கி இருந்தபடி அவர்கள் சரமாரியாக கையெறி குண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதலை மேற்கொண்டனர்.
இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அதிகாலை 2.30 மணி வரை இந்த தாக்குதல் நீடித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஏராளமான துணைநிலை ராணுவத்தினர் படுகாயம் அடைந்திருந்ததுடன் இரண்டு இரணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |