நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்! யார் அந்த மர்ம நபர்கள்? வெளியான பரபரப்பு தகவல்
மேற்கு ஆப்பிரிக்காவின் கரைக்கு அப்பால் உள்ள கினியா வளைகுடாவில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக Dryad உலகளாவிய கடல்சார் பாதுகாப்பு இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
Dryad வெளியிட்ட தகவலின் படி, மாலுமிகளுக்கு மிகவும் ஆபத்தான கினியா வளைகுடாவில் பனாமா கொடியுடன் பயணித்த Maria E எண்ணெய் டேங்கர் கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
சரியாக Sao Tome-மின் வடமேற்கில் 108 நாட்டிகல் மைல் தொலைவில் 12:22 GMT மணிக்கு தாக்குதல் நடந்தது.
பனாமா கொடியுடன் பயணித்த Maria E கப்பல் கிரீஸ் நிறுவனமான லோட்டஸிக்கு சொந்தமானது என Dryad இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதலின் போது மீன்பிடி கப்பலான Lianpengyu, எண்ணெய் கப்பலுக்கு அருகே இருந்துள்ளது.
Lianpengyu மீன்பிடி கப்பல் பிப்ரவரி 7ம் திகதி கடற்கொள்ளையர்களால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அன்று முதல் அது அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக Dryad இணையத்தளத்தில் தகவல் தெரிவித்துள்ளது.