ஆட்சியை கலைக்க எடுத்த முடிவு... நாட்டின் ஜனாதிபதியை கைது செய்த பொலிஸ்
பெரு நாட்டின் நாடாளுமன்றம் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவை பதவி நீக்கம் செய்ய வாக்களித்ததுடன், கைது நடவடிக்கை முன்னெடுக்கவும் வழிவகுத்துள்ளது.
ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ பதவி நீக்கம்
பெரு நாட்டில் ஆட்சியை கலைத்துவிட்டு, புதிதாக தேர்தலுக்கு முயன்ற நிலையில், ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ நாடாளுமன்ற அவையால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், ஜனாதிபதிக்கு எதிராக 101 வாக்குகளும், ஆதரவாக 6 வாக்குகளும், 10 பேர் வாக்கெடுப்பை புறக்கணிக்கவும் செய்துள்ளனர்.
@reuters
இதனையடுத்து, ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ முறைப்படி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், பொலிசாரால் கைதும் செய்யப்பட்டுள்ளார். மேலும், துணை ஜனாதிபதியான Dina Boluarte இனி ஜனாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பெட்ரோ காஸ்டிலோ காவல் நிலையம் ஒன்றில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பொலிஸ் தரப்பு பதிவேற்றியுள்ளது. அத்துடன், முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ எனவும் பொலிஸ் அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர்.
காவல்துறையும் ராணுவமும் எச்சரித்தன
தற்போதைய ஆட்சியை கலைத்துவிட்டு, புதிதாக தேர்தல் முன்னெடுக்க வேண்டும் என பெட்ரோ காஸ்டிலோ தெரிவித்திருந்தார். இதனையடுத்து முக்கிய அமைச்சர்கள் பலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வந்தனர்.
இந்த நிலையில், ஆட்சியை கலைக்க பெட்ரோ காஸ்டிலோ மேற்கொண்ட வழி அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று காவல்துறையும் ராணுவமும் அவரை எச்சரித்தன. தொடர்ந்து, ஜனாதிபதியிடம் கடந்த வாரம் இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றம் விளக்கம் கேட்டது.
@reuters
மேலும், அரசின் ஒப்பந்தங்கள் மூலமாக தனியாக பெட்ரோ காஸ்டிலோ சொத்துக்களை சேர்ப்பதாகவும், ஒரு சட்டவிரோத அமைப்பை இதற்காகவே அவர் முன்னெடுத்து வருவதாகவும் அக்டோபர் மாதம் புகார் ஒன்றும் அளிக்கப்பட்டது.
ஆனால் அந்த குற்றச்சாட்டுகள் மொத்தமாக பொய் எனவும், ஆட்சியை கைப்பற்ற சிலர் முன்னெடுக்கும் சதி எனவும் அவர் கூறியிருந்தார். ஆசிரியராக இருந்து ஜனாதிபதியாக 2021 ஜூலை மாதத்தில் பொறுப்பேற்ற பின்னர் இரண்டு முறை பதவி நீக்க நடவடிக்கைகளை பெட்ரோ காஸ்டிலோ எதிர்கொண்டுள்ளார்.
ஆனால் ஆட்சியை கலைப்பதாக அவர் அறிவித்ததையடுத்து கூட்டணிக் கட்சிகள் அவரைக் கைவிட்டதுடன் முக்கிய அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்.
@reuters

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.