சாகும் முன் 90 நிமிட வீடியோ.,24 பக்க குறிப்பு! இந்தியாவை அதிரவைத்த சம்பவம்..பொறியாளரின் மனைவி, மாமியார் கைது
இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசத்தில் பொறியாளர் உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரத்தில் மனைவி மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
AI பொறியாளர்
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த AI பொறியாளர் அதுல் சுபாஷ் (34) பெங்களூருவில் தூக்கிட்டு உயிரை மைய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினரால் துன்புறுத்தலுக்கு ஆளான சுபாஷ், தன் மீது அவர்கள் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
அவர் இறப்பதற்கு முன்பு, 24 பக்க மரண குறிப்பை எழுதிவைத்ததுடன் 90 நிமிட வீடியோவையும் பதிவு செய்து வைத்தார். மேலும் தனது மரணத்திற்கு பிறகு செய்ய வேண்டியவை குறித்து அட்டவணை ஒன்றை தயார் செய்திருந்தார்.
நாடு முழுவதும் அதிர்வலை
அதுல் சுபாஷ் தனது பதிவுகளில், "பிரிந்து சென்ற தனது மனைவி நிகிதா சிங்கானியா, தன் மகன் மற்றும் அவரின் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக" கூறியுள்ளார்.
அத்துடன் தன் மீதான வழக்குகளை திரும்பப்பெற ரூ.3 கோடியும், மகனைப் பார்க்க வருவதற்கு ரூ.30 லட்சமும் நிகிதா குடும்பத்தினர் கேட்டதாவும், உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, வழக்குகளைத் தீர்த்து வைக்க ரூ.5 லட்சம் கேட்டதாவும் குறிப்பிட்டுள்ளார்.
அதுல் சுபாஷின் இறப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் மாமியார், உறவினர்கள் தலைமறைவாகினர்.
இந்த நிலையில் நிகிதா, அவரது தாயார் நிஷா மற்றும் சகோதரர் அனுராக் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |