நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையரின் குடும்பத்தினர் எங்கே இருக்கிறார்கள்? அவர்களை தொடர்பு கொள்வது குறித்து வெளிவந்த முக்கிய தகவல்
நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையரின் குடும்பத்தினர் வேறு நாடுகளில் வசிப்பதாக தெரியவந்துள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் மேற்கு ஆக்லாந்து பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் இலங்கையர் என அடையாளம் காணப்பட்டவர் ஆறு வாடிக்கையாளர்களைக் கத்தியால் தாக்கினார்.
இதில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதல்தாரியை பொலிசார் சம்பவயிடத்திலேயே சுட்டுக்கொண்டுள்ளனர். குறித்த தாக்குதல்தாரி ஐ.எஸ் தீவிரவாத குழு ஆதரவாளர் எனவும், ஏற்கனவே கண்காணிக்கப்பட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
தற்போது வரையில் அந்த நபரின் பெயர் மற்றும் இன்னபிற விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதனிடையில் அவரின் விபரங்களை வெளியிட தடை இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பான முழு தகவல் தற்சமயம் வெளியாகியுள்ளது. நீதிபதி வைலி கூறுகையில், தாக்குதல்தாரியில் அடையாளங்களை மறைப்பதற்கான சரியான அடிப்படை விடயங்கள் இல்லை.
ஆனால் அந்த நபரின் குடும்பத்தினர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள்.
அவர்களிடம் அறிவுறுத்தல்களைப் பெற வழக்கறிஞர்கள் அவர்களைத் தொடர்பு கொள்ள நேரம் தேவை.
அதனால் தேவைப்பட்டால் 24 மணி நேர கால அவகாசத்தை நீட்டிக்க பரிசீலிக்கலாம் என கூறியுள்ளார்.