நியூசிலாந்தில் இலங்கையரால் தாக்குதலுக்கு உள்ளான 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேரின் உடல்நிலை குறித்து வெளியான அதிகாரபூர்வ தகவல்
நியூசிலாந்தில் இலங்கையர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த 7 பேரின் தற்போதைய உடல்நிலை குறித்தும் அவர்களில் பெண்கள் எத்தனை பேர் என்பது குறித்தும் தெரியவந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஆக்லாந்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் Ahamed Aathill Mohamed Samsudeen (32) என்ற இலங்கையர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்தனர்.
தாக்குதலுக்கு பின்னர் சம்சுதீன் சுட்டு கொல்லப்பட்டார். காயமடைந்த ஏழு பேரில் மூவரின் உடல்நிலை மோசமாக இருந்ததால் ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மற்ற நால்வரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் வீட்டில் இருந்தபடியே குணமாகி வருகிறார்கள்.
இந்த தகவல்களை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அதிகாரியான அசிஸ்டெண்ட் கமிஷ்னர் Lauano Sue Schwagler வெளியிட்டுள்ளார்.
மேலும் காயமடைந்த ஏழு பேரில் 29, 43, 60, 66 வயதுடைய நான்கு பெண்களும், 53, 57, 77 வயதுடைய மூன்று ஆண்களும் அடக்கம் என தெரியவந்துள்ளது.