ஆக்லாந்து தாக்குதல்தாரியின் பெயர் அம்பலப்படுத்தப்படும்: உயர் நீதிமன்றம் உறுதி
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் பல்பொருள் வணிக வளாகத்தில் தாக்குதலில் ஈடுபட்ட நபரின் பெயர் உள்ளிட்ட தகவல்களை வெளியிடப்போவதாக தெரிய வந்துள்ளது.
ஆக்லாந்தின் வணிக வளாகம் ஒன்றில் புகுந்து வாடிக்கையாளர்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் இலங்கையர் ஒருவர். சம்பவத்தில் ஆறு பேர் காயங்களுடன் உயிர் தப்ப, அதில் மூவர் ஆபத்தான நிலையில் மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல்தாரியை பொலிசார் சம்பவயிடத்திலேயே சுட்டுக்கொண்டுள்ளனர். குறித்த நபர் இலங்கையர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் ஐ.எஸ் தீவிரவாத குழு ஆதரவாளர் எனவும், ஏற்கனவே கண்காணிக்கப்பட்டு வந்துள்ளதும் பொலிஸ் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு கருதி குறித்த நபரின் பெயர் வெளியிடப்படாத நிலையில், தற்போது உயர் நீதிமன்றம் அதற்கு தடை இல்லை என அறிவிக்க, இன்னும் சில மணி நேரங்களில் அவர் பெயர் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.