வட கொரியாவிற்கு எதிராக அமெரிக்காவில் முத்தரப்பு உச்சி மாநாடு (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
ரஷ்யாவின் தலைநகரான் மொஸ்கோ நகரிலுள்ள கட்டடமொன்று இரு தினங்கள் இடைவெளியில் இன்று இரண்டாவது தடவையாகவும் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகியது.
இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே நகரில் இன்று அதிகாலை பாரம் தூக்கி (கிரேன்) ஒன்று வீழ்ந்ததால் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடகொரியாவில் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை சமாளிக்க முத்தரப்பு நாடுகளின் ஒத்துழைப்பு, பாதுகாப்பு போன்றவை தொடர்பில் கலந்துரையாட முத்தரப்பு உச்சிமாநாடு அமெரிக்காவின் கேம்ப் டேவிட்டில் வருகிற 18ஆம் திகதி முத்தரப்பு உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
ரஷ்யாவின் பெருமையை நிலைநாட்டவுள்ளதாக வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் அறிவித்துள்ளார்.
துருக்கி நாட்டில் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்நது விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 23 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |