ஆகஸ்ட் மாதம்: வங்கி முதல் சிலிண்டர் வரை என்னென்ன மாற்றங்கள் வரும்ன்னு தெரியுமா?
ஜூலை இன்னும் சில நாள்களில் முடியப்போகிறது, ஆனால், ஆகஸ்ட் மாதம் தொடங்கினால் நடுத்தர வர்க்கத்தினருக்கு சற்று வேதனைதான் தரும்.
ஆகஸ்ட் மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும். மேலும், வங்கி நாள்கள், ஆதார் அட்டை, பான் அட்டை, வருமான வரி தாக்கல் போன்ற சேவைகளில் அதிரடி மாற்றங்கள் நடைபெறும்.
சரி ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம் -
ஐடிஆர் அபராதம்
ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஆனால் ஜூலை 31ம் தேதிக்குள் ITR தாக்கல் செய்யவில்லை என்றால், அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். அதுவும் அபராதத்துடன் வரியும் செலுத்த வேண்டும். தாமதம் செய்தால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
வங்கி விடுமுறை
ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு அதிக விடுமுறை வரும். ரக்ஷா பந்தன் மற்றும் முஹர்ரம் என்று 14 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் எல்பிஜி சிலிண்டர் விலை வீட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ஆகஸ்ட் மாதம் மாற்றம் இருக்கலாம்.
மேலும், எல்பிஜி சிலிண்டர்கள், வணிக சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இருக்கலாம். இந்நிறுவனங்கள் ஒரு ஒரு மாதமும் 1 மற்றும் 16 ஆகிய தேதிகளில் எல்பிஜி விலையை மாற்றுகின்றன. இவை தவிர, பிஎன்ஜி மற்றும் சிஎன்ஜி விகிதத்திலும் மாற்றம் ஏற்படலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |