77 வயது மியான்மர் தலைவருக்கு 33 ஆண்டுகள் சிறை! ஏழு ஆண்டுகள் தண்டனையை நீட்டித்த ராணுவ நீதிமன்றம்
மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு சிறை தண்டனை 33 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தலைவர்
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி (77) உட்பட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர்.
ஆங் சான் சூகிக்கு ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுதல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் சூகி மறுத்த நிலையில், அவரது வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்களிடம் பேச அனுமதிக்கப்படவில்லை.
தண்டனை நீட்டிப்பு
இந்த நிலையில், மற்றொரு ஊழல் வழக்கில் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சூகி மொத்தம் 33 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிப்பார் என ராணுவ நீதிமன்றம் கூறியுள்ளது.
@dia Commons