39 ஆண்டுகால அரிய சாதனையை முறியடித்த அவுஸ்திரேலிய வீரர்கள்!
டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலிய அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் 39 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்துள்ளனர்.
டெஸ்ட் சாம்பியன்
உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி கோப்பையைக் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 163 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் அவர் டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் மூன்று இடங்கள் முன்னேறி 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தற்போதைய டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை அவுஸ்திரேலிய அணியின் வீரர்களேப் பிடித்துள்ளனர்.
39 ஆண்டுகால சாதனை முறியடிப்பு
மார்னஸ் லபுசாக்னே முதலிடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் 2வது இடத்திலும், ஹெட் 3வது இடத்திலும் உள்ளனர். இதன்மூலம், ஒரே தரப்பில் இருந்து 3 துடுப்பாட்ட வீரர்கள் 39 ஆண்டுகளுக்கு பின், டெஸ்ட் தரவரிசையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
Getty Images
இதற்கு முன்பு, 1984ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளின் கார்டன் கிரீனிட்ஜ், கிளைவ் லாயிட் மற்றும் லேரி கோம்ஸ் ஆகியோர் இந்த சாதனையை படைத்திருந்தனர்.
மேலும், டெஸ்ட் தரவரிசையில் உஸ்மான் கவாஜாவுடன் (9வது இடம்) சேர்த்து நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |