அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ODI தொடரை இழந்த இந்தியா - 17 ஆண்டுகளுக்கு பிறகு நேர்ந்த சோகம்
இந்தியாவிற்கு எதிரான ODI தொடரை அவுஸ்திரேலியா வென்றுள்ளது.
தொடரை வென்ற அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து 2வது ஒருநாள் போட்டி, அடிலெய்டில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்களை இழந்து, 264 ஓட்டங்கள் குவித்தது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக, ரோஹித் சர்மா 73 ஓட்டங்களும் கே.எல்.ராகுல் ஓட்டங்களும் குவித்தனர். அவுஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து, 265 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 46.2 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து, 265 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக, ஷார்ட் 74 ஓட்டங்களும், கூப்பர் கோனோலி 61 ஓட்டங்களும் எடுத்தனர்.
17 ஆண்டுகளில் முதல் தோல்வி
இந்த வெற்றி மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அவுஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
அடிலெய்டில் 17 ஆண்டுகளுக்கு பின்னர், ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.
சுப்மன் கில் இந்திய ODI அணியின் அணித்தலைவராக பொறுப்பேற்ற 2 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.
3வது ஒருநாள் போட்டி, வரும் அக்டோபர் 25 ஆம் திகதி சிட்னியில் நடைபெற உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |