விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு: ஆவுஸ்திரேலிய தலைநகரில் பரபரப்பு
- கான்பெரா விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு
- விமான நிலையத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது காவல்துறை
அவுஸ்திரேலிய தலைநகரில் உள்ள கான்பெரா விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் உள்ள கான்பெரா விமான நிலையத்தின் பிரதான முனைய கட்டிடத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதையடுத்து விமான நிலையம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
மேலும் துப்பாக்கி சூடு நடத்திய நபர் விமான நிலைய காவலர்களால் கைது செய்யப்பட்டதுடன், துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சிசிடிவி காட்சிகள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், தற்போது நடத்தப்பட்ட தாக்குதலில் கைது செய்யப்பட்ட ஒரு நபர் மட்டுமே காரணமானவர் என நம்புவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
AFP
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான விசா வழங்கல்: உக்ரைன் அமைச்சர் வெளிப்படை
பொதுமக்கள் விமான நிலையத்திற்கு தற்போது வர அனுமதிக்கப்படவில்லை, மேலும் இதுத் தொடர்பான கூடுதல் விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.