உலக சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தியது அவுஸ்திரேலியா! ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரை அவுஸ்திரேலியா வென்று அசத்தியுள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டி
அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வென்ற நிலையில் 2-வது ஒருநாள் ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது.
டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித், 114 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Defeat in Sydney and Australia take the series.
— England Cricket (@englandcricket) November 19, 2022
Scorecard: https://t.co/9lajx13uIO
??#AUSvENG??????? pic.twitter.com/hhptNYnDBl
இங்கிலாந்து தோல்வி
இங்கிலாந்துத் தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டுகளும் டேவிட் வில்லி, வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 38.5 ஓவர்களில் 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஸ்டார்க், ஸாம்பா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியா 2-0 என முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி 22ஆம் திகதி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Australia ensure a series victory with another thumping win ?
— ICC (@ICC) November 19, 2022
Watch the #AUSvENG ODI series LIVE on https://t.co/MHHfZPzf4H (in select regions) ?
? Scorecard: https://t.co/C3d30LtqwI pic.twitter.com/YKAfDhghSz