டி20 உலக கோப்பையில் அந்த இருவரையும் ஏன் சேர்க்கல தெரியுமா? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்
ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா தோற்ற நிலையில் அது தொடர்பில் சில விடயங்களை மனம் திறந்து பேசியுள்ளார் தினேஷ் கார்த்திக்.
படுதோல்வி
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியானது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் படுதோல்வியை சந்தித்தது.
இந்திய அணி பெற்ற இந்த தோல்விக்கு அணியில் உள்ள வீரர்களை சரியாக தேர்ந்தெடுக்காததும், பிளேயிங் லெவனில் முறைப்படி வீரர்களை விளையாட வைக்காததுமே காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று இந்த தொடரில் ஒரு சில வீரர்களை எடுத்துவிட்டு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காததும் மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.
BCCI/TWITTER
சாஹல் மற்றும் ஹர்ஷல் பட்டேல்
இது குறித்து பேசிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், சாஹல் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகிய இருவருக்குமே இந்த டி20 உலகக்கோப்பை தொடரின் துவக்கத்திலேயே ஆடும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்பது தெரியும்.
தேவைப்பட்டால் மட்டுமே அவர்களை அணியில் சேர்ப்போம் என நிர்வாகம் கூறியதாகவும் ஆனால் ஒரு போட்டியில் கூட அவர்கள் பங்கேற்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
espncricinfo