புலம்பெயர் சிறார்களை கொத்தாக சிறையில் தள்ளிய நாடு... இழப்பீடு வழங்க தற்போது முடிவு
பெரியவர்கள் என்று கருதி புலம்பெயர் சிறார்களை தவறாக சிறையில் அடைத்த அவுஸ்திரேலியா தற்போது அவர்களுக்கு இழப்பீட்டு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இழப்பீடாக 17 மில்லியன் டொலர்
அவுஸ்திரேலிய சிறைகளில் 120க்கும் மேற்பட்ட இந்தோனேசியர்கள் அவ்வாறு தண்டனை அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 17 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை வழங்க அவுஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
ABC News: Ari Wu
2009 மற்றும் 2012 க்கு இடையில் சிறிய படகுகள் மூலமாக நுழைந்தவர்கள் கிறிஸ்மஸ் தீவில் அல்லது டார்வினில் கைது செய்யப்பட்டனர். கைதானபோது பெரும்பாலானோரின் வயது 12 என்றே கூறப்படுகிரது.
அந்த சிறார்களை அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி படகுகளில் இழுத்துச் செல்லப்பட்டதாக அவர்கள் கூறியிருந்தனர். எங்கே கொண்டு செல்லப்படுகிறோம் அல்லது புகலிடக் கோரிக்கையாளர் என்ற போர்வையில் பயன்படுத்தப்படுவார்கள் என்பது குறித்து அவர்கள் தெரிந்திருக்கவில்லை.
சட்டத்திற்கு புறம்பானதாகும்
மட்டுமின்றி, அப்போதைய அவுஸ்திரேலிய சட்டத்தின் அடிப்படையில், சிறிய படகுகளில் நாட்டில் நுழைபவர்கள் சிறார்கள் என்றால், அவர்களின் சொந்த நாடுகளுக்கு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட வேண்டும். அவர்கள் மீது வழக்கு பதிவது சட்டத்திற்கு புறம்பானதாகும்.
ABC News
இந்த நிலையிலேயே புலம்பெயர் சிறார்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை சிறை அதிகாரி ஒருவர் வெளிச்சத்துக்கு கொண்டுவந்து, அவுஸ்திரேலிய அரசாங்கம் மீது சமூக ஆர்வலர்களால் வழக்கு தொடுக்கவும் காரணமானார்.
அத்துடன் அவுஸ்திரேலிய மனித உரிமைகள் அமைப்பும் விரிவான ஆய்வுகளை முன்னெடுத்து, தவறு நடந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது இந்தோனேசியாவை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு, இழப்பீடு வழங்க அவுஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |