அம்பலமான பிரதமரின் சம்பளம் விவரம்... மக்களிடையே வெடித்த சர்ச்சை
அவுஸ்திரேலியாவின் மிக உயர்ந்த பதவியில் உள்ள அரசியல்வாதிகள், நாட்டின் வருமானம் ஈட்டுபவர்களில் முதல் ஒரு சதவீதத்தினரில் அடங்குவர்.
அதிக சம்பளம் வாங்கும்
பல ஜனநாயக நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்களை விடவும் அவுஸ்திரேலிய அரசியல்வாதிகள் அதிகமாக சம்பாதிக்கிறார்கள். இது அரசியல்வாதிகளின் செயல்திறன் அடிப்படையில் இனி சம்பளம் இருக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய மக்கள் பலர் பரிந்துரைக்க வழிவகுத்துள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆண்டுக்கு 607,516 டொலர் சம்பளமாகப் பெறுகிறார், இது அவரை மற்ற உலகத் தலைவர்களை விட அதிக சம்பளம் வாங்கும் அரசியல்வாதியாக மாற்றியுள்ளது.
பிரித்தானியாவின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆண்டுக்கு 354,988 டொலர் மட்டுமே சம்பளமாகப் பெறுகிறார். மட்டுமின்றி, கனடாவின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பிரதமர் மார்க் கார்னியை விடவும் அதிகம், அவருக்கு 466,835 டொலர் சம்பளமாக வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், அவுஸ்திரேலியாவில் அரசியல்வாதியாக பணி செய்வதே உண்மையில் அதிக சம்பளம் பெறும் வேலை என விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. மேலும், வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ப அரசியல்வாதிகள் கடினமாக உழைக்கவும் வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் பிரதமருக்கு கீழ் செயல்படும் மூத்த அமைச்சர்கள் ஐவர் அதிக சம்பளம் ஈட்டும் நபர்களாக உள்ளனர். துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் 479,003 சம்பளம் வாங்குகிறார், பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் இருவரும் தளா 438,113 டொலர் சம்பளமாக வாங்குகிறார்.
செயற்பாடு அடிப்படையில்
நிதியமைச்சர் கேட்டி கல்லாகர் மற்றும் உள்விவகார அமைச்சர் டோனி பர்க் ஆகியோர் தலா 408,905 டொலர் சம்பளமாக வாங்குகிறார்கள். அவுஸ்திரேலியாவில் 421,936 டொலர் அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கும் எவரும் வருமானம் ஈட்டுபவர்களில் முதல் 0.8 சதவீதத்தினரில் அடங்குவர்.
மட்டுமின்றி, அவுஸ்திரேலியாவின் 17 மற்ற கேபினட் அமைச்சர்களும் தலா 403,064 டொலர் சம்பளமாக வாங்குகிறார்கள். மேலும், 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 368,015 டொலர் சம்பளமாக வாங்குகிறார்கள்.
டசின் கணக்கான இணை அமைச்சர்களும் 292,075 டொலர் வரையில் சம்பளமாக வாங்குகிறார்கள். அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மட்டுமின்றி, அவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கி ஆளுநர் மைக்கேல் புல்லக்கின் அடிப்படை சம்பளம் 811,108 டொலரில் இருந்து மொத்த ஊதியம் 1.057 மில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலிய மக்கள், செயற்பாடு அடிப்படையில் அரசியல்வாதிகளின் சம்பளம் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |