பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம்..! கனடா, பிரித்தானியா, பிரான்சுடன் இணைந்த மற்றொரு நாடு
பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க அவுஸ்திரேலியா முடிவெடுத்துள்ளது.
பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம்
ஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாடு செப்டம்பரில் நடைபெற உள்ள நிலையில், பாலஸ்தீனத்தை அவுஸ்திரேலியா அங்கீகரிக்க முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக கான்பெரா நாடாளுமன்ற கட்டிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி ஆல்பானீஸ், மத்திய கிழக்கின் காசாவில் நடைபெற்று வரும் மோதல், மற்றும் பட்டினிகளுக்கான தீர்வு “இரண்டு அரசு தீர்வு தான்” பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது தான என தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு ஐக்கிய நாடுகள் சபையின் 80 வது உச்சி மாநாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
காசாவை முழுவதுமாக ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் போவதாக இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்ததற்கு பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவுஸ்திரேலியாவின் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் இந்த முடிவில் கனடா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுடன் அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.
நியூசிலாந்து செப்டம்பரில் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என அறிவித்ததை அடுத்து அவுஸ்திரேலியாவின் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |