குடிமக்கள் அல்லாதவர்களை விரைவாக நாடுகடத்த சட்டம் இயற்றும் மற்றொரு நாடு
அமெரிக்கா, அமெரிக்கக் குடிமக்கள் அல்லாதவர்களை நாடுகடத்த திட்டமிட்டுவருவதுபோல், அவுஸ்திரேலியாவும் குடிமக்கள் அல்லாதவர்களை விரைவாக நாடுகடத்த சட்டம் இயற்ற முடிவு செய்துள்ளது.
குடிமக்கள் அல்லாதவர்களை விரைவாக நாடுகடத்த சட்டம்
அவுஸ்திரேலியா, அவுஸ்திரேலிய குடிமக்கள் அல்லாதவர்களை மூன்றாம் நாடுகளுக்கு நாடுகடத்துவதை எளிதாக்கும் வகையில் நாளை சட்டம் ஒன்றை இயற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குற்றச்செயல்கள் காரணமாக அகதி விசா மறுக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை மறுகுடியமர்த்துவதற்காக, தென் பசிபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள, உலகின் மூன்றாவது சிறிய நாடான Nauru என்னும் நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளது அவுஸ்திரேலியா.
இந்நிலையில், அவுஸ்திரேலிய அரசின் இந்த முடிவு, ட்ரம்பின் கொள்கைகளை ஒத்திருப்பதாகவும், அவுஸ்திரேலியா, அகதிகளை சிறு தீவு நாடுகளில் கொண்டு கொட்டுவதுபோல் உள்ளதாகவும் மனித உரிமை அமைப்புகள் விமர்சனம் முன்வைத்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |