கடைசி பந்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி.,டி20 தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா
வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
டிம் டேவிட், மேட் ரென்ஷா
அவுஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சாட்டோக்ராமில் நடந்தது.
NAHID RANA STRIKES! 🚀🏏🇧🇩
— Bangladesh Cricket (@BCBtigers) June 19, 2026
A sharp catch by Saif Hassan and Cooper Connolly is on his way back! pic.twitter.com/2qKLwVeA2b
முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது அதிரடி காட்டிய டிம் டேவிட் 26 பந்துகளில் 45 ஓட்டங்கள் விளாசினார்.
சிக்ஸர்களை பறக்கவிட்ட மேட் ரென்ஷா (Matt Renshaw) 52 பந்துகளில் 89 ஓட்டங்கள் (5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) விளாச, அவுஸ்திரேலிய அணி 196 ஓட்டங்கள் குவித்தது.
தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணி
பின்னர் ஆடிய வங்காளதேச அணி அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கியது. தன்ஸித் ஹசன் 30 (15) ஓட்டங்களும், சைப் ஹசன் 42 ஓட்டங்களும் விளாசினர்.
வங்காளதேசத்தின் வெற்றிக்கு கடைசி பந்தில் 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை எதிர்கொண்ட அணித்தலைவர் டௌஹித் ஹரிடோய் (Towhid Hridoy) ஆட்டமிழந்தார்.
இதனால் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி டி20 தொடரை கைப்பற்றியது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |