உலகின் உயரமான மலையில்...சடலமாக மீட்கப்பட்ட ஆவுஸ்திரேலிய மற்றும் கனேடிய மலையேறிகள்
பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள உலகின் இரண்டாவது உயரமான மலையான K2-வில் ஆவுஸ்திரேலியா மற்றும் கனடாவைச் சேர்ந்த மலையேறுபவர்கள் உயிரிழந்ததாக இரு நாட்டுகளின் அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானின் The Dawn செய்தி நிறுவனம் இந்த வாரத்தின் தொடக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, ஈக்கின் மற்றும் கார்டியர் ஆகிய இருவரும் k2 இல் முகாம் 1 மற்றும் முகாம் 2க்கு இடையில் தங்கியுள்ளனர்.
இந்த பகுதியில் ஏற்பட்ட வெவ்வெறு விபத்துகளின் விளைவாக அவர்கள் இருவரும் ஜூலை 19ம் திகதி முதல் தொடர்பில் இருந்து தவறியுள்ளனர் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் தேடுதல் மற்றும் மீட்புக் குழு இவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில், பாகிஸ்தான் ஆல்பைன் கிளப்பின் துணைத் தலைவரான கர்ரார் ஹைத்ரி, ஈக்கின் மற்றும் கார்டியர் ஆகியோரின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து ஆவுஸ்திரேலியாவின் வெளியுறவு துறை மத்தேயு ஈக்கின் மறைவை உறுதிப்படுத்தியுள்ளது. ஆளில்லா விமானம் முலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில் வியாழன் கிழமை ஈக்கின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது.
அத்துடன் மற்றொரு கனேடிய நபரான ரிச்சர்ட் கார்டியரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகவும், அவர் இறந்து விட்டார் என்ற தகவலையும் கனேடிய பத்திரிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பிணைக் கைதிகள் பரிமாற்றம்...அமெரிக்கா ரஷ்யா இடையே உருவாகும் பேச்சுவார்த்தை
K2 மலை உலகின் மிகவும் குளிரான மற்றும் காற்று வீசும் மலையேற்றங்களில் ஒன்றாகும். ஏறுபவர்கள் செங்குத்து பாறைகளை கடக்க வேண்டும், அதே நேரத்தில் அடிக்கடி மற்றும் எதிர்பாராத பனிச்சரிவுகளைத் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.