பிணைக் கைதிகள் பரிமாற்றம்: அமெரிக்கா- ரஷ்யா இடையே உருவாகும் பேச்சுவார்த்தை
பிணைக் கைதிகள் பரிமாற்றம் குறித்து விவாதிக்க அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை அழைப்பதற்கான நேரத்தை ரஷ்யா விரைவில் முன்மொழியும் என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிகள் விளாடிமிர் புடின் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவருக்கு மத்தியில் கடந்த ஆண்டு ஜெனீவா உச்சிமாநாட்டிலிருந்தே பிணைக் கைதிகளை பரிமாறி கொள்ளுவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் லாவ்ரோவ் தெரிவித்தார்.
அத்துடன் இதுத் தொடர்பாக விவாதிக்க அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை அழைப்பதற்கான நேரம் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ரஷ்ய மற்றும் அமெரிக்க சிறையில் உள்ள கைதிகள் பிரிமாற்றம் குறித்து விவாதிக்க விரும்புவதாக ஆண்டனி பிளிங்கனும் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய சிறையில் உள்ள அமெரிக்க கூடைப் பந்து நட்சத்திரம் பிரிட்னி கிரைனர் மற்றும் முன்னாள் கடற்படை வீரர் பால் வீலன் ஆகியோரை விடுவிக்க அமெரிக்க ஒற்றை கணிசமான வாய்ப்பை வழங்குவது குறித்தும் பிளிங்கன் கருத்து தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: இலங்கைக்கான புதிய நிதியுதவி வழங்கும் திட்டமில்லை: உலக வங்கி தகவல்!
அத்தகைய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் சிறையில் இருக்கும் ஆயுதக் கடத்தல் குற்றவாளி விக்டர் பௌட்டை பரிமாறிக் கொள்ள வாஷிங்டன் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.